ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் கடற்பரப்பில் 40 வயதான லூக் வால்ஃபோர்ட் என்ற இளம் பாதிரியார் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று சுறா ஒன்று அவரை கடித்து குதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஒன்றரை மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேத பரிசோதனை முடிவுகளுக்கு பின்னர் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.