
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு பயங்கர சம்பவம் குறித்த செய்தி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கு ஒரு பிரபலமான வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் நாடு முழுவதும் உள்ளது. இந்த நிறுவனங்களை குறி வைத்து கழிவறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்களில் உள்ள கழிவறைகளில் முதலில் சிறிய அளவில் வெடி விபத்துகள் அடிக்கடி அரங்கேறிய நிலையில் தற்போது தான் அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டது வெளியே தெரிய வந்தது.
இந்த வெடிகுண்டுகள் கழிவறையில் யாரேனும் உட்கார்ந்து ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வெடிக்கக் கூடியவை. இதனால் சமீபத்தில் ஒரு பெண் கஸ்டமர் கூட காயமடைந்தார். இதில் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படாது. இந்த விவகாரத்தில் அல்டென் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில் மன அழுத்தத்தின் காரணமாக வெடிகுண்டுகள் வைத்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கழிவறையில் குண்டு வைத்த பிறகு அதில் யாரேனும் ஒருவர் உட்கார்ந்து அது வெடித்து சிதறுவதை மறைந்திருந்து வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் அந்த குண்டு வெடித்தவுடன் அவர் கிளம்பி விடுவார். இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.