இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெங்கு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவில்லை. இந்த நிலையில் அவருடைய உடல் நலம் குறித்து மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அவர் 80 சதவீதம் வரை குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்று உள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருந்தாலும் அவரின் உடல்நிலை 100% தகுதி பெற இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம் என்று தெரிகின்றது.