உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விவாதங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு இந்த பொது சிவில் சட்ட மசோதாவை தயார் செய்தது. அந்த மசோதா மாநில அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இன்றைய தினம் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பல தார மணங்களை ஒழிப்பது, குழந்தை திருமணங்களை ஒழிப்பது, ஆண் பெண் இரு பிரிவினருக்கும் சொத்தில் சம பங்கை அளிப்பது, அதேபோல திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்வது (லிவிங் ரிலேஷன்ஷிப்)  பதிவு செய்தல் என பல்வேறு அம்சங்கள் இந்த மசோதா படி சட்டமாக்கப்படும்.

ஏற்கனவே பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான வாதங்கள் நடைபெற்று வருகிறது. இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் அளித்து, அரசிதழ் வெளியிடப்பட்டு அது சட்டமாக மாறும்.

இது சட்டமாக மாறும் பட்சத்தில் நாட்டிலேயே சுதந்திரத்திற்கு பிறகு பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெயரை உத்தரகாண்ட் பெறப்போகிறது. அஸ்ஸாம், குஜராத் மாநிலங்களில் பொதுசேவில் சட்ட வசதி அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடும் முழுவதும் பொது சிவில் சட்டமாக கொண்டு வர முயற்சி மத்திய அமைச்சர் பேசியிருந்த நிலையில் உத்தரகாண்ட் பொதுச் செயலாளர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது