பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய கூட்டாளிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் பிபவ் குமார் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

டெல்லியில் சுமார் 10 பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிபவ் குமார் முன்பு டெல்லி நீர் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.