சீனாவில் ஹாட்பாட் (Hotpot) எனப்படும் கொதிக்கும் நிலையில் இருக்கும் சூடான உணவை ஆர வைக்காமலே அப்படியே உட்கொண்ட பெண்ணின் தொண்டைப் பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் அளவிற்குப் பெரிய புண் (Ulcer) ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உணவை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணுக்கு நெஞ்சு மற்றும் தொண்டைப் பகுதிகளில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர், எரிச்சலைக் குறைப்பதற்காக உடனடியாகக் குளிர்ந்த நீரைக் குடித்துள்ளார்.

எனினும், குளிர்ந்த நீர் அவரது பாதிப்பைக் குறைக்கவில்லை. மாறாக, அதிக வெப்பத்தால் ஏற்கனவே மென்மையடைந்திருந்த தொண்டைப் பகுதி தசைகளை, குளிர்ந்த நீர் மேலும் காயப்படுத்தி புண்ணை தீவிரமாக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவுகளை மிக அதிக வெப்பநிலையில் அப்படியே உட்கொள்வது உடலின் உள் உறுப்புகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் உணவை ஓரளவிற்கு ஆறவிட்ட பின்னரே உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.