வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சிவமணி, ராஜேஷ் ஆகியோர் பாகாயம், சத்துவாச்சாரி பகுதியில் இருக்கும் 11 ஹோட்டல்களில் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரம் இல்லாமல் இயங்கிய இரண்டு ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக 2 ஹோட்டல்களுக்கு 2000 ரூபாய் வீதம் 4000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிக கலர் பொடி பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 3 கிலோ சிக்கன், 4 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும், ஹோட்டலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.