செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் புகழேந்தி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசி வருகின்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தான் சீமானுக்கு இவ்வளவு அச்சம் ஏற்பட்டுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்தால் இவருக்கு என்ன? மனநிலை பாதித்து இப்படி கத்த வேண்டிய அவசியம் என்ன? அரசியலில் விஜய் வளர்ச்சி சீமானுக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் இப்படி நடந்து கொள்கிறார்.

திருமாவளவனிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு தான் சீமான் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால் இன்று திருமாவளவனே சீமான் சரியான மனிதர் கிடையாது அவர் செய்கின்ற செயல் சரியாக இல்லை என்று சொல்கின்றார். செருப்பை காட்டுவது, கெட்ட வார்த்தையில் பேசுவது மற்றும் மரியாதை இல்லாமல் பேசுவது போன்ற தவறான செயல்களில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். பெரியார் பற்றி சீமான் விமர்சனத்திற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். சீமானை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை இப்படி செய்யவில்லை என்றால் திராவிட இயக்கங்கள் பெரியாரைத் தலைவர் என்று சொல்ல முடியாது என புகழேந்தி பேசியுள்ளார்.