
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, சீமானுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தவர் திருமாவளவன் தான். ஆனால் இன்று பிரபாகரன் தான் சீமானுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்ததாக கூறுகின்றார். பிரபாகரனுக்கு இத விட்டா வேற வேலை இல்லையா? இது போன்ற ஆட்களை தமிழ்நாட்டில் வளர விட்டால் மிகப்பெரிய ஆபத்து தான். சீமான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் தோல்வி பயத்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டார். பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் சீமானின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி எதிர்நீச்சல் போடவில்லை, அவர் சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கிறார். தேர்தல் பரப்புரையில் சீமானின் பேச்சின் மீது தேர்தல் நடத்தை விதிப்படி கட்சியை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் மனு கொடுத்துள்ளோம். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக புகழேந்தி கூறியுள்ளார்.