
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே சிக்னல் கொடுத்து விட்டார். அப்படி காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கின்றது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் கஜானா காலியாக இருந்தாலும் மதி நுட்பத்துடன் ஆட்சியை இயக்கி வருகிறார். கடுமையான நிதி பற்றாக்குறை நிலவுகிறது. எத்தனை ஆயிரம் கோடி நிதியை நிறுத்தினாலும் எங்களுடைய பணி தொடரும். தமிழகத்திற்கு இரு மொழி கொள்கை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சீமான் எதை வைத்து இப்படி சொல்கின்றார் என எனக்கு தெரியவில்லை. பழுத்த மரத்தின் மீது கல்வியறிந்தால் லாபம் இருக்கும் என்று திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர். எந்த ஒரு சூழல் வந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளதாக முதல்வர் கூறியுள்ளார் என சேகர் பாபு பேசியுள்ளார்.