சீனாவின் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் எளிய மக்களின் வறுமை, குறுகலான தெருக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் மோசமான வாழ்வாதாரக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி, “சீனாவிலும் இந்தியாவைப் போன்ற சாதி அமைப்பு உள்ளதா?” என்ற புதிய விவாதத்தை உலகளவில் கிளப்பியுள்ளது.
சீனாவின் பண்டைய சமூக அமைப்பான ‘ஷி-நோங்-கோங்-ஷாங்’ என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அது வெறும் தொழிலைச் சார்ந்த ஒன்று மட்டுமே என அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ மறுப்புத் தெரிவித்துள்ள போதிலும், அங்கு நடைமுறையில் இருக்கும் ‘ஹுகோ’ என்ற குடும்பப் பதிவு முறை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த ஹுகோ முறையினால் நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் சமூக மற்றும் பொருளாதாரச் சலுகைகள் சுமார் 30 கோடி கிராமப்புறப் பின்னணி கொண்ட தொழிலாளர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை என்றும், இதனால் அங்குத் தீவிர வாழ்வாதாரப் பாகுபாடு நிலவுவதாகவும் கூறப்படும் நிலையில், 2014 முதல் சீன அரசாங்கம் இந்த விதிமுறைகளில் சில தளர்வுகளைக் கொண்டு வரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
