கர்நாடக மாநிலம் பெங்களூருர் கலாசி பாளையம் என்னும் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்வநாளன்று அவர் அப்பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு அருகில் இருந்த சிறுவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுவன் பெண்கள் கழிவறைக்கு பின்புறம் நின்று கொண்டு ஜன்னல் வழியாக அந்த பெண்ணை செல்போன் மூலமும் படம் பிடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று இச்சம்பவத்தை பற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவனை கைது செய்ததுடன் கோர்ட்டில் ஆஜர் செய்து அவரை சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து சென்றனர்.