ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான மோதலின் போது, மைதானத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் இணையத்தை அதிரவைத்துள்ளது. சிஎஸ்கே வீரர் சிவம் துபே பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஹைதராபாத் அணி ஆதரவாளர் ஒருவர் கேலரியில் அமர்ந்து கொண்டு ஏதோ “செய்வினை” செய்வது போல விசித்திரமான சைகைகளைச் செய்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, அவர் அந்தச் சைகைகளைச் செய்த அடுத்த சில வினாடிகளிலேயே, சாகிப் உசேன் வீசிய பந்தில் சிவம் துபே கிளீன் போல்டாகி வெளியேறினார்.
Black magic live 😭 pic.twitter.com/rzJYd6kjti
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 19, 2026
இந்த எதேச்சையான மற்றும் திகைப்பூட்டும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அந்த ரசிகரின் செய்கைக்கும் விக்கெட் விழுந்ததற்கும் உள்ள நேர ஒற்றுமையைப் பார்த்து நெட்டிசன்கள் “இது பிளாக் மேஜிக்-ஆ?” என ஜாலியாக மீம்ஸ்களைத் தட்டி வருகின்றனர். இந்த சுவாரஸ்யமான சம்பவத்திற்கு மத்தியில், ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் களத்தில் நடந்த இந்த “மந்திர” விக்கெட் தற்செயலாக இருந்தாலும், ரசிகர்களுக்கு இது ஒரு செம எண்டர்டெயின்மெண்ட் ஆக அமைந்துவிட்டது.
