சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மாவீரன் படத்தின் ஆடியோ லான்ச் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் ஜூலை 2-ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.