டைரக்டர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொம்மை”. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை போன்றோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்நிலையில் பொம்மை படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகிற ஜூன் 16ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.