தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2012 வருடம் மெரினா என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமானர். அதனை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது உச்சம் தொட்ட நடிகராக வளர்ந்து உள்ளார். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் வீக்னஸ் குறித்து நடிகை பிரியங்கா மோகன் ஓபனாக கூறியுள்ளார். அவர் கூறியது, ” SK-க்கு இனிப்புகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அதற்கு அவர் அடியமைக்கிவிட்டர். சூட்டிங் ஸ்பாட்டிலும் எப்போதும் இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். அவர் சாப்பிடுவது மட்டுமில்லாமல் எங்களுக்கும் இனிப்புகளை கொடுத்து சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளா