தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் 2 கோடியே 20 லட்சம் வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்று PNGRB தலைவர் அனில் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். PNG என்று சொல்லப்படும் இந்த எரிவாயுவை தமிழகத்தில் இதுவரை 17,000 பேர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ள நிலையில் இந்த எரிவாயு நாம் பயன்படுத்தும் எல்பிஜி கேஸ் சிலிண்டரை விட மிகவும் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.