கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாக்கு சேகரித்து பேசினர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், கோவை பொள்ளாச்சி கூட்டத்தை வெற்றி விழா மாநாட்டை போல் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்கு கோவை பொறுப்பாளர் அமைச்சர் முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா,சக்கரபாணி, சாமிநாதன், கரூர் செயல்வீரர் அன்பிற்கினிய சகோதரர் செந்தில் பாலாஜி , ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.