அயர்லாந்தில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் திரையிடலில் முதன்மை விருந்தினராக சஞ்சு சாம்சன் கலந்து கொண்டார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகர் என்பது தெரிந்ததே. கேரளாவில் பிறந்த சஞ்சுவுக்கு சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்த் மீது பிரியம். 28 வயதில், தலைவாவை சந்திக்க வேண்டும் என்ற தனது சிறுவயது ஆசையை சஞ்சு நிறைவேற்றினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

சஞ்சு மீண்டும் ஒருமுறை சூப்பர் ஸ்டார் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார். சாம்சன் தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அயர்லாந்தில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் சிறப்புக் காட்சி சனிக்கிழமை திரையிடப்பட்டுள்ளது. சஞ்சு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அயர்லாந்து மற்றும் இந்தியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது வர்ணனையாளர் நியால் ஓ பிரையன் இதை வெளிப்படுத்தினார். சஞ்சு சமீபத்தில் தனக்கு பிடித்த நடிகரின் படத்தைப் பார்த்ததாக ஓ பிரையன் கூறினார். மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சாதனை படைத்துள்ளது. தற்போது வரை கிராஸ் ரூ.500 கோடி வசூல் செய்ததாக தெரிகிறது.

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 2-0 என தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்த போட்டியில் சஞ்சுவும் முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். அவர் 26 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸுடனான டி20 தொடரில் தோல்வியடைந்த சஞ்சு, ஜெயிலர் படத்தைப் பார்த்து சஞ்சு அதிரடியாக ஆடியதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே இன்று ஆசிய கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் காத்திருப்பு வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார். சஞ்சு சாம்சன் 17 பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டேண்ட் பை வீரராக தேர்வு செய்யப்பட்டதால் ரசிகர்கள் பிசிசிஐ மீது அதிருப்தியில் உள்ளனர்..

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (து.கே), விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (காத்திருப்பு வீரர்)