
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் படித்து முடித்துவிட்டு கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ஒரு திருமண விழாவில் மேடையை அலங்கரிப்பதற்காக 17 வயது சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். அங்கு கேட்டரிங் சர்வீஸ்க்காக இளம் பெண் சென்றுள்ளார். அப்போது இளம்பெண் மற்றும் சிறுவன் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போன் நம்பர்களை வாங்கி பேசி வந்த நிலையில் இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கினர்.
இவர்கள் இருவரும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் 17 வயது சிறுவனுடன் ஒரு இளம்பெண் குடும்பம் நடத்தி வருவதாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.