இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் வழக்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை 6 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறகு அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.