மேற்குவங்கம் ஹௌரா மருத்துவமனையில் 13 வயது சிறுமி ஒருவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். சிடி ஸ்கேன் அறையில் இருந்து வெளியில் வந்த சிறுமி கண்கலங்கியபடி வந்துள்ளார்.

அவரிடம் விசாரித்ததில் இருந்த தற்காலிக ஊழியர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியவந்துள்ளது. சிறுமியிடம் அவர் அணிந்திருந்த பேண்டை கழற்ற வேண்டும் என்று மிரட்டி பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உறவினர்களும் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

“>