மும்பை மற்றும் தூத்துக்குடி இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் மும்பையில் இருந்து ஆகஸ்ட் 4,11,18,25 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளிலும் தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்ட் 6 , 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளிலும் வாராந்திர ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.