தமிழக அரசு பள்ளிகளையும், பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்பு இருக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு அகாடமி பாடங்களை தவிர, ஸ்போக்கன் இங்கிலீஸ் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகளை எடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ‘டேப்லட்’ வழங்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.