Galaxy M 13 5ஜி-ன் பதிப்பான Samsung Galaxy M14 5G ரூ.15,000 சிறந்த ஸ்மார்ட் போனாக மாறக்கூடிய அனைத்தையும் செய்கிறது. இதனால் Galaxy M14 5G ஆனது அதன் போட்டியாளர்களிடம் இருந்து 15k விலை வரம்பில் தனித்து நிற்கிறது. FHD+ தெளிவுத் திறனை கொண்ட 90Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டு உள்ளது. கூடுதலாக போன் 5nm Exynos 1330 SoC வாயிலாக இயக்கப்படுகிறது.

எனினும் Galaxy M14 5G-ன் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சம் அதன் பெரிய 6,000 mAh பேட்டரி ஆகும். இது சிறந்த பேட்டரி ஆயுளை கொடுக்கிறது. இவ்விலை வரம்பில் சிறந்த கேமரா உடன், கேலக்ஸி எம்14 5ஜி சாம்சங் அம்சங்களை குறைக்காமல் தரமான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.