சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும் காரியங்கள் அற்புதமாக நடக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். நிதி நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். வாங்கிய கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் பாடுபடுவீர்கள். சிந்திக்காமல் எதிலும் ஈடுபட மாட்டீர்கள்.

இன்று வெளியுலக தொடர்பு விரிவடையும். சொன்ன வாக்கை எப்படியும் காப்பாற்றுவீர்கள். பேசும்போது கவனமாக இருங்கள். விரக்தி நிலை மாறி விடிவு காலம் கண்டிப்பாக பிறக்கும். சிலருக்கு இடம் மாற்றத்தால் இனிய மாற்றம் ஏற்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும். தேக நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பயணத்தால் பிரியமானவரை சந்திப்பீர்கள்.

இன்று பெண்களுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் இல்லை. நிம்மதியாக காணப்படுவீர்கள். வீண் ஆசைகள் மனதில் தோன்றும் பார்த்துக் கொள்ளுங்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்த முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்