நடிகர் சிம்புவின் STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்க உள்ள நிலையில் அதற்கான முதல்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடப்படக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.