தமிழக அரசு தயாரிக்கும் வலிமை உள்ளிட்ட சிமெண்ட் களை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையம் தொடங்குவதற்கு தாட்கோ நிறுவனம் 2.13 லட்சம் மானியம் வழங்குகின்றது. தமிழக அரசின் டான் செம் நிறுவனம், அரசு, வலிமை ஆகிய பிராண்டுகளில் வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு சிமெண்ட் விற்பனை செய்கின்றது.

இவை டீலர்ஷிப் எனப்படும் விற்பனை முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் ,  அரசு சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை நிலையம் தொடங்குவதற்கு தாட்கோ எனப்படும் தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் 2.15 லட்சம் மானியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.