பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான், மெட்காலா 2025 விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு படைத்துள்ளார். அவரை நேரில் காண்பதற்காக நியூயார்க் நகரத்தில் உள்ள அவரது ஹோட்டலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நீண்ட நேரமாக  காத்திருந்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ரசிகை செஹ்ரிஷும் ஷாருக்கானை பார்க்க காத்து கொண்டிருந்தார். உணவுப் பதிவாளரான இவர், ஷாருக்கானை பார்க்கும் தருணத்தை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sehrish سھرش 🌸 (@sehrish.eats)

“என் சிறுவயது கனவு நனவானது,” எனக் கூறும் செஹ்ரிஷின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், முதலில் சித்தார்த் மல்ஹோத்ராவைப் பார்த்த பின், ஷாருக்கானை பார்த்த மகிழ்ச்சி அவரது முகத்தில் தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனை கடந்த பார்வைகளை கடந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “எனக்கும் இது நடந்திருக்கணும் போல,” என்று ஒருவர் எழுத, மற்றொருவர் “கான் உண்மையிலேயே உலக நட்சத்திரம்” என பாராட்டியுள்ளார்.