ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பூபாலன் முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தம்பதி இருவருக்கும் தலா 5 ஏக்கர். இவர்களுடைய மூத்த மகன் மகள்களுக்கு திருமணமான நிலையில் கடைசி மகன் அசோக் பெற்றோரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அசோக் மீது முத்துலட்சுமிக்கு வெறுப்பு வந்தது. இதில் அசோக் விவசாய நிலத்தில் பணிகள் செய்யும்போது குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் போலீஸ் ஸ்டேஷன் வரை விஷயம் சென்றது. அப்போது முத்துலட்சுமி விவசாய பணிகள் செய்ய சம்மதித்தார்.

இந்த பிரச்சனை முடிவடைந்த நிலையில் அசோக் விவசாயம் செய்வதற்காக சென்றார். அப்போது அவருடைய தாய் முத்துலட்சுமி கையில் கத்தியுடன் வந்து என்னுடைய நிலத்தில் விவசாயம் செய்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து விடுவேன் என்று தன் மகனை மிரட்டியுள்ளார். இதனை அசோக் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். மேலும் சிறு வயது முதல் விவசாயம்  மட்டுமே செய்து வந்ததால் தனக்கு வேறு ஏதும் தொழில் தெரியாது எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.