இன்றைய காலத்தில் சாகசங்களில் ஈடுபட்டு, அதை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி புகழையும், லைக்ஸையும் பெறுவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, ஒரு நபர் சிறிய பாம்பு ஒன்றைக் கையில் பிடித்து, ஆபத்தைப் பற்றி கவலைப்படாமல் அசால்டாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக, அவரது பின்னால் இருந்து வந்த ஒரு மலைப் பாம்பு அவரைத் தாக்கியது.

இதனால் பதறிய அவர் அலறியடித்து தண்ணீரில் குதித்தார். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த நபர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து கேள்விகளை எழுப்பியதுடன், இதுபோன்ற ஆபத்தான செயல்களின் விளைவுகளை எச்சரித்தனர். “இது மரணத்துடன் விளையாடுவது போல உள்ளது,” “இப்படி ஆபத்தை அலட்சியம் செய்யக் கூடாது,” என பலரும் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலானோர் அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்புகின்றனர்,

ஆனால் உறுதியான தகவல்கள் இல்லை. இந்த சம்பவம், சாகசத்தின் பெயரில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்கு முன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்த்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by @rayys_clipz

“>

இதுபோன்ற செயல்கள், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.