இணையத்தில் மது போதையில் இருக்கும் ஒரு நபர், சாலையில் சென்று கொண்டிருந்த பாம்பை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அதனுடன் சாகசத்தில் ஈடுபடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் மது போதையில் தனது ஆடையை கழற்றி, சாலையில் இருந்த பாம்பை சீண்டி, படிப்படியாக அதை தனது வீட்டிற்குள் வரவழைக்கிறார்.
பின்னர், பாம்பு அவரைத் தாக்க முயல, அவர் தனது ஆடையைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் சுழற்றி, பாம்பை கோபப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் பாம்பு அவரை மிக நெருக்கமாக நெருங்க, அவர் திடீரென பாம்பின் வாலைப் பிடித்து, பெல்ட்டை சுழற்றுவது போல விடாமல் சுழற்றிக் கொண்டே இருக்கிறார்.
இந்தக் காட்சி, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ஏனெனில் அவர் பாம்பை கீழே விடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாம்பு தாக்கிவிடும் என்ற அச்சத்தில் அவர் தொடர்ந்து சுழற்றிக் கொண்டே இருக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “அவன் பாம்பு கிட்ட மாட்டல, பாம்புதான் அவனிடம் மாட்டிக்கிச்சு! பாம்பு மைண்ட் வாய்ஸ்: ‘அடேய், என்னை இறக்கி விடு, தலை சுத்துது!’” என்று நகைச்சுவையாகவும், கிண்டலாகவும் கருத்துகள் பதிவு செய்துள்ளனர்.
சிலர், “இவர் பாம்பைக் கொல்லாமல், மயக்கமடையச் செய்து ஒரு உயிரைக் காப்பாற்றிவிட்டார்,” என வஞ்சபுகழ்ச்சியாக புகழ்ந்தும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வைரல் வீடியோ, மது போதையில் பொறுப்பற்ற முறையில் ஆபத்தான உயிரினங்களுடன் விளையாடுவதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.
View this post on Instagram
“>
அதேநேரத்தில், இந்த நபரின் துணிச்சலையும், வித்தியாசமான அணுகுமுறையையும் பாராட்டி, இணையத்தில் இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்று, பலரையும் பேச வைத்துள்ளது.
