மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதைடுத்து சசிகலா அதிமுக தொண்டர்கள் கலங்கி விட வேண்டாம். மீண்டும் ஒன்றிணைவோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை சசிகலா போயஸ்கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசினார். இதற்கிடையில்  அவர் ஆலோசனை நடத்த இருந்து வீட்டிற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்கள் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டி இருந்தார்கள்.

அதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்று இணைவோம் என்று குறிப்பிட்டுள்ளது. ஒன்று சேர்ந்து வென்று காட்டுவோம் .சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.