மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில், மிகச் சிறிய மற்றும் சாதாரணக் காரணத்திற்காக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு, நொடிப்பொழுதில் கட்டுக்கடங்காத பயங்கர மோதலாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் வெறும் வார்த்தை தடிப்பாகத் தொடங்கிய இந்தத் தகராறு, நேரம் செல்லச் செல்ல இரு தரப்பிலும் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு, நடுரோட்டில் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கும் நிலைக்குச் சென்றது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்தக் கோஷ்டி மோதலால், சுற்றியிருந்த கடைக்காரர்களும் பாதசாரிகளும் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
இரு தரப்பினரும் கட்டைகள் மற்றும் கைகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு பயங்கரமாகத் தாக்கிப் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டதால், அந்த இடமே ஒரு போர்க்களம் போலக் காட்சியளித்தது. இதில் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹிங்கோலி காவல் துறையினர், உடனடியாக தலையிட்டு மோதலைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டினர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், சட்டவிரோதமாகக் கூடுதல் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ், இந்த மோதலில் தொடர்புடைய 11 பேர் மீது காவலத்துறை வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இதுபோன்ற அமைதியைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் காவலத்துறை எச்சரித்துள்ளது.
