சினிமா மக்கள் தொடர்பாளராக திகழ்ந்த கடையம் ராஜூ உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிவாஜியின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் PRO-வாக இருந்துள்ளார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடையம் ராஜூ, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.