ஹாங்காய் முன்னாள் நடிகையும் அழகியுமான போனி லாய் (46) காலமானார். நார்த் பாயிண்ட், பரர்க் பெல்வெடெரில் உள்ள தனது வீட்டில் போனி லாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. அவரது வீட்டில் தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மயங்கிய நிலையில் இருந்த அவரை கண்ட அவருடைய மகன் மதியம் 1.12 மணியளவில் போலீசில் புகார் அளித்தார். லாய் , யங் அண்ட் டெஞ்சரஸ் 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு ஏடிவி மிஸ் ஆசியா போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.