
சென்னை சூளைமேட்டில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் கோபிநாத் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபிநாத் நல்ல உடற்கட்டுடன் இருந்துள்ளார். இதனால் அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக நவீன் குமார் கூறியுள்ளார். இதற்காக அவரிடம் இருந்து ரூ.30000 பெற்றுள்ளார். ஆனால் நவீன் குமார் தன்னை ஏமாற்றியது கோபிநாத்துக்கு தெரிய வரவே ஆத்திரத்தில் அவர் தன் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து நவீன் குமாரை கடத்தினார்.
அதன் பிறகு நவீன் குமாரின் தாயாருக்கு செல் போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு அவர்கள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தங்களை தேடுவதை தெரிந்து கொண்ட கோபிநாத் நவீன் குமாருடன் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து கோபிநாத் உட்பட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஜிகர்தண்டா பட பாணியில் ரவுடியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.