
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இது தொடர்பாக திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது தன் கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, விஜய் சினிமாவில் பெரிய நடிகர் தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை உதயநிதி தான் பெரிய அரசியல்வாதி.
விஜயை உதயநிதியுடன் ஒப்பிட்டு பேச முடியாது. உங்களை வேடிக்கை பார்ப்பது வேறு. ஓட்டு போடுவது வேறு. விஜய் சேவை மனப்பான்மையுடன் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான். ஆனால் அவர் நினைப்பது போன்ற அரசியல் எளிமையானதோ அல்லது சுலபமானதோ கிடையாது என்று கூறினார். மேலும் விஜயை உதயநிதியுடன் ஒப்பிடவே முடியாது என அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.