
2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இன்று அக்டோபர் 20ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.