தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இரண்டாவது மாதம் ஆக பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தில் கடந்த மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் கூடுதலாக 5041 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் மகளின் உரிமை தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டு பணம் பெற்றவர்களில் சிலர் தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இறந்தவர்களின் பெயர்களில் விண்ணப்பித்து பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கண்டறியப்பட்டது சுமார் 8,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஏற்கனவே ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு  நிபதனைகளின் படி ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.