சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள் மற்றும் குளிர்பானங்களில் குறைபாடு இருந்தால் கட்செவிஅஞ்சல் மூலமாக புகார் அளிப்பதற்கு செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவில் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். கொசு மருந்து அடித்தால் மற்றும் திடக்கழிவுகளில் ஈ தொல்லைகள் ஒலிக்கும் வகையில் மாநகராட்சி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களில் புகார் இருந்தால் பொதுமக்கள் நேரடியாக 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு அஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.