கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் அம்பேத்கர் காலணியில் வசித்து வரும் மைனர் பெண் ஒருவர் எல்லப்பா என்ற இளைஞரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் அந்த பெண் ஒருதலையாக காதலித்து வந்த எல்லப்பா அவருக்கு சித்தப்பா முறை ஆவார். இந்த நிலையில் தன்னுடைய காதலை ஏற்க மறுத்து அவரை பழிவாங்க எண்ணிய அந்த பெண் எல்லப்பாவின் அண்ணனின் இரண்டு மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

இந்தப் பழியை எல்லப்பா மீது சுமத்தி விடலாம் என்று நினைத்தேன் நாடகம் ஆகிய அந்த பெண்ணை போலீசார் கிடுக்கு பிடி கேள்வி கேட்டு விசாரணையில் சிக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக்கொண்ட நிலையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.