ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது அக்சர் படேல் பந்து வீசினார். இந்தப் பந்தை ரிஷாத் ஹூசைன் சிக்ஸர் அடித்தார். அப்போது அந்தப் பந்து பார்வையாளர்கள் மாடத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இரும்பு பலகைக்குள் புகுந்தது. இதை பார்த்த விராட் கோலி பந்தை எடுத்துக் கொடுப்பவர்கள் வரும் வரை தாமதிக்காமல் அவரே உள்ளே சென்று பந்தை எடுத்தார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.