பொதுவாகவே பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. உணவுகளை பொறுத்தவரையில் பிரியாணிக்கு அடிமைகள் ஏராளம். பிரியாணி என்றாலே அனைவருக்கும் ஹைதராபாத் பிரியாணி தான் ஞாபகத்திற்கு வரும். ஹைதராபாத்தில் தடுக்கி விழுந்தால் பிரியாணி கடை என்று ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் மணிகொண்டாவை சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விக்கியில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது பிரியாணியில் சிக்கன் துண்டுகளுடன் நன்கு சமைத்து பொறித்த பிளாஸ்டிக் கவர் கிடந்துள்ளது. இதனைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார் . இதனை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது அந்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.