கொல்கத்தாவில் ஹவுரா ரயில் நிலையம் இந்தியாவிலேயே பெரிய ரயில் நிலையம்.  இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லுவார்கள். இங்கே சில மாதத்திற்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றை பயணி ஒருவர் வீடியோவோடு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய நண்பரோடு ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக ரயில் நிலையத்தில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிக்கன் பப்ஸ் மீது எலி ஊர்ந்து செல்வதை கண்டு வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து கடை ஊழியரிடம் கூறிய போது , அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  இதை பார்க்கும்பொழுது இப்படி தானே தினமும் இப்படி நடக்கும் என்றே தோணுகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.