
தனஸ்ரீ வர்மா – சாஹல் ஒன்றாக செல்பி எடுத்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனஸ்ரீ வர்மா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் தொடர்ந்து தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இப்போது அவர் கணவர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் இருவரும் தரமான நேரத்தை செலவிடுவதைக் காணலாம். இருப்பினும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புகைப்படங்களை தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்களும், லைக்குகளும் வருகின்றன. இருப்பினும் இருவரின் கெமிஸ்ட்ரி மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த புகைப்படத்தை கணவர் யுஸ்வேந்திர சாஹலுடன் பகிர்ந்து கொண்டபோது, தனஸ்ரீ வர்மா, ‘எங்கள் நாளுக்கு நாள் திரைக்குப் பின்னால்’ என்று எழுதியுள்ளார். தனஸ்ரீ மற்றும் யுஸ்வேந்திராவின் புகைப்படம் ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. தனஸ்ரீ வர்மா 5 புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தனஸ்ரீ ஒரு பிரபல நடன இயக்குனர் மற்றும் அவர் தொழில் ரீதியாக பல் மருத்துவர். சாஹல் – தனஸ்ரீ இருவரும் டிசம்பர் 22, 2020 அன்று திருமணம் செய்து கொண்டனர். சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரையும் சமூக ஊடகங்களில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து ஒருவர், ‘தம்பி, உலகக் கோப்பைக்கு வாருங்கள், நீங்கள் தேவை. பிறகு அண்ணியுடன் நேரத்தை செலவிடுங்கள் என்றார். தொடர்ந்து சாஹல் மற்றும் தனஸ்ரீயின் புகைப்படங்களுக்கு தொடர்ந்து கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
Love is in the air – Dhanashree Verma shares latest pictures with her better half Yuzvendra Chahal.#DhanashreeVerma #YuzvendraChahal #India #Cricket #Couple #Trending #Hot #Love #Wolf777News #Socialmedia pic.twitter.com/LD2FEen03U
— Wolf777News (@Wolf777news) October 4, 2023
You're absolutely right! It's not a dinner date unless you get some proper pictures. Yuzvendra Chahal and wifey Dhanashree Verma sure know how to do it! 📸🍽️ #filmyape #bollywood #dhanashreeverma pic.twitter.com/mnByINdVmt
— Filmyape (@Filmyape) October 4, 2023