
மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையப்படுத்தி சாவா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்று வரும் நிலையில் வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. இந்நிலையில் நவி மும்பையில் உள்ள பாலாஜி மூவி பிளக்ஸ் தியேட்டரில் சாவா திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் முகலாய பேரரசர் ஔவுரங்கசீப் செய்த கொடூரமான கொடுமைகளை காண்பித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த 5 இளைஞர்கள் அதனை கேலி செய்தும் சிரித்தும் ஜோக்குகள் அடித்துக் கொண்டிருந்தனர். இது அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால் வாலிபர்கள் அனைவரையும் அவர்கள் மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். அதன் பிறகு அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
बालाजी थिएटर, कोपरखैरणे येथे “छावा” चित्रपटातील शेवटच्या दृश्यांवर हे निजामी मराठ्यांचे हे मुस्लिम मावळे हसत होते.
काही छत्रपतींच्या मावळ्यांनी त्यांना अद्दल घडवून पोलीसांच्या ताब्यात दिले.
मुस्लिमांचे लांगूलचालन करणाऱ्या निजामी मराठ्यांना हा व्हिडीओ दाखवा. pic.twitter.com/DJoOMcOwDc
— टवाळखोर कार्ट (@Tawalkhorkart) February 28, 2025