பாலிவுட் நடிகை திவ்யங்கா திரிபாதி சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய திவ்யங்கா மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் கையின் எலும்புகள் உடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தெரிகிறது. இதை அவரது கணவர் விவேக் தஹியா தெரிவித்துள்ளார்.

திவ்யங்கா ‘யே ஹை மொஹப்பதீன்’ சீரியல் மூலம் அங்கீகாரம் பெற்றார். விஷயம் தெரிந்த பாலிவுட் நட்சத்திரங்கள் திவ்யங்கா குணமடைய வாழ்த்தி பதிவுகள் போட்டு வருகின்றனர்.