சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளைப் பிடித்து செல்வதாகவும் அவர்களை விசாரித்த போது 100 ரூபாய்க்கு விற்பதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனால் சாலையோர உணவகங்களில் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.