நீலகிரி மாவட்டம் கல்லக்குறை பகுதியில் சாலையில் நேற்று இரவு காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமையின் உடலை ஆய்வு செய்த போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காட்டெருமை இறந்தது தெரியவந்தது. அந்த குண்டுகளை அகற்றி பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அதன் உடலை புதைத்தனர்.

அந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிஷ்மான்(45), நிஷோர்(53) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்த போது இருவரும் சேர்ந்து காட்டெருமையை சுட்டு கொலை செய்தது தெரியவந்தது. வனத்துறையினர் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.